தேவயானியை அமெரிக்க போலீசார் நிர்வாணப்படுத்தி சோதனையிட்ட காட்சிகள் வெளியானதாக வதந்தி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய இந்திய தூதர் தேவயானியை அமெரிக்க போலீசார் கடந்த மாதம் கைது செய்த முறையும், அத்து மீறி நடந்து கொண்ட விதமும் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க போலீஸ் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த பின்பு தேவயானி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். நடந்த சம்பவம் பற்றி டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு இ.மெயிலில் அவர் உருக்கமான கடிதம் அனுப்பியிருந்தார்.
’அமெரிக்க போலீசார் என்னை கைது செய்தபோது தூதர் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. துணைத்தூதர் என்ற அடிப்படையில் எனக்கு தூதரக ரீதியிலான பாதுகாப்பு உள்ளதை கைது செய்த அதிகாரிகளிடம் நான் பலமுறை எடுத்துக் கூறினேன். என்றாலும் அவர்கள் தொடர்ந்து என்னை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள்.
மீண்டும் மீண்டும் கை விலங்கு மாட்டினார்கள். ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். உடலின் அந்தரங்க பகுதிகளிலும் சோதனையிட்டனர். டி.என்.ஏ., சோதனைக்காக மாதிரி எடுத்தனர்.
கிரிமினல் குற்றவாளிகளுடனும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடனும் என்னை அடைத்து வைத்தனர். நான் மனம் உடைந்து பலமுறை கதறி அழுதும் என்னை விடவில்லை’ என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருதார்.
இதற்கிடையே, தேவயானியை அமெரிக்க போலீசார் நிர்வாணப்படுத்தி சோதனையிட்ட காட்சிகள் அமெரிக்க போலீசாரின் இணையதளத்தில் வெளியானதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி பெண் போலீசார் சிலர் சோதனையிடுவதை போலவும், சோதனையிடப்படும் பெண் அலறித் துடித்து கதறுவதை போலவும் சில தெளிவற்ற வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.
No comments: