அஜீத்தின் அடுத்த படத்தில் அனுஷ்கா
அஜீத் ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது. விஜய், சூர்யா, ஆர்யாவுடன் ஜோடியாக நடித்த அனுஷ்கா, விரைவில் அஜீத் ஜோடியாக நடிக்க உள்ளார். சூர்யா படம் டிராப் ஆனதையடுத்து, அஜீத் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் கவுதம் மேனன். இப்படத்துக்கு ஹீரோயின் தேடி வந்தார். தற்போது, அனுஷ்காவை ஜோடியாக்க முடிவு செய்திருக்கிறார். இப்படத்துக்கான ஷூட்டிங் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதுபற்றி அனுஷ்காவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், அஜீத் ஜோடியாக நடிக்க அனுஷ்காவை அணுகி உள்ளனர். அவர் இன்னும் ஸ்கிரிப்ட் கேட்கவில்லை. அஜீத், கவுதம் மேனன் படம் என்பதால் நடிப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இன்னும் ஒப்பந்தம்போடப்படவில்லை. தற்போது தெலுங்கில் 2 படங்களில் அனுஷ்கா நடித்து வருகிறார். இதன் பெரும்பகுதி ஷூட்டிங் நடந்து முடிந்திருந்தாலும் இன்னும் ஷூட்டிங் தொடர்கிறது. இதற்கிடையில் அஜீத் படத்துக்கு தேதி ஒதுக்கி தருவதற்கான முடிவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர். கவுதம் மேனன் தரப்பில் விசாரித்தபோது, அனுஷ்காவை அஜீத்துடன் ஜோடியாக நடிக்க கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது.
ஓ.கே. சொல்லி இருக்கிறார். இன்னும் அதிகாரபூர்வ ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை. அநேகமாக வரும் மார்ச் மாதம் அனுஷ்கா ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிய வந்தது.
No comments: