மும்பையில் வீடு தேடும் டாப்ஸி
தென்னிந்திய படங்களில் வாய்ப்பு குறைந்ததும், பாலிவுட்டுக்கு படையெடுக்கும் ஹீரோயின்கள் வரிசையில் இணைகிறார் டாப்ஸி. டெல்லியை சேர்ந்த இவர் தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானார். வந்தான் வென்றான், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்தார். தற்போது வை ராஜா வை உள்ளிட்ட 2 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் சஸ்மி பதூர் என்ற படம் மூலம் என்ட்ரி ஆனார். அடுத்து ரன்னிங் சாதி டாட் காம் என்ற படத்தில் நடித்து வருகிறார். தென்னிந்திய படங்களில் எதிர்பார்த்த அளவு வாய்ப்பு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தார் டாப்ஸி. இந்நிலையில் பாலிவுட்டில் தனது கவனத்தை முழுமையாக திருப்ப முடிவு செய்துள்ளார்.
இதற்காக மும்பையில் வீடு தேடுகிறார். இதுபற்றி டாப்ஸி கூறும்போது, மும்பையில் குடியேற வீடு தேடிக் கொண்டிருப்பது நிஜம் தான். நான் நடித்துள்ள 2வது இந்தி படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்துக்காக நிறைய விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி உள்ளது. மேலும் இந்தியில் நடிக்க நிறைய வாய்ப்புகளும் வருகிறது. எனவே, அங்கேயே தங்கி எனது பணிகளை கவனிக்க கண்டிப்பாக வீடு தேவைப்படுகிறது. கூடியவிரைவில் மும்பையில் வீடு எடுத்து தங்குவேன் என்றார்.
No comments: