Header Ads

மதுரையில் மு.க.அழகிரியுடன், நடிகர் எஸ்.வி.சேகர் இன்று சந்திப்பு

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரியை அரசியல் கட்சி தலைவர்கள், பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்கவர்கள் வைகோ, எச்.ராஜா உள்ளிட்டோர். இவர்கள் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாகவும் உள்ளதால் தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி மு.க.அழகிரியிடம் கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில் நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் இன்று மதுரை வந்தார். அவர் மு.க.அழகிரியை இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இருவரும் சிறிது நேரம் தனி அறையில் பேசிக் கொண்டிருந்தனர்.

தற்போது பாரதீய ஜனதாவில் இருக்கும் எஸ்.வி.சேகர், திடீரென அழகிரியை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் நடிகர் எஸ்.வி. சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சிவகாசியில் மோதி விளையாட்டு பாப்பா என்ற நாடகத்தை நடத்த இருக்கிறேன். இதற்காக இங்கு வரும்போது மு.க.அழகிரியை சந்தித்து பேசினேன். இந்த சந்திப்பின்போது அரசியல் எதுவும் பேச வில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் 14–ந்தேதிக்குள் தீர்ந்துவிடும். அவரை பதவியை விட்டு நீக்கினாலும், கலைஞரின் மகன் என்ற ஸ்தானத்திலிருந்து நீக்க முடியாது. மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் சகோதரர் என்ற ஸ்தானத்திலிருந்து நீக்க முடியாது. உறவில் இருந்து நீக்க முடியாது.

இது இயற்கை. என்னை பொறுத்தவரை இந்தியா முழுவதும் 300 இடங்களில் பாரதீய ஜனதா வெற்றிபெற்று மோடி பிரதமராவார் என உறுதியாக நம்புகிறேன்.

அரசியல் மக்களுக்கு சேவையாற்றும் இடம். அது பணம் சம்பாதிக்கும் இடம் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Powered by Blogger.