Header Ads

இந்தியாவின் அதிரடி நீடிக்குமா?: ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது.

இதன் ‘சூப்பர்10’ சுற்றில் 10 அணிகள் பங்கேற்று உள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு நுழையும்.

டோனி தலைமையிலான இந்திய அணி ‘குரூப்2’ பிரிவில் இடம் பெற்று உள்ளது. பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ்ஸ், ஆஸ்திரேலியா, வங்காளதேசம் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானையும் (7விக்கெட்), 2–வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசையும் (7 விக்கெட்டு), 3–வது ஆட்டத்தில் வங்காள தேசத்தையும் (8 விக்கெட்) தோற்கடித்தது. தொடர்ந்து பெற்ற 3 வெற்றி மூலம் இந்திய அணி அரை இறுதிக்கு நுழைந்தது.

இந்திய அணி 4–வது மற்றும் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இன்று (ஞாயிற்றுக் கிழமை) சந்திக்கிறது. இந்திய நேரடிப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் தூர்தர்ஷன், ஸ்டார் ஸ்போர்ட்சில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்திய அணியின் அதிரடி ஆட்டம் தொடருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரை இறுதியில் நுழைந்து விட்டதால் விளையாடாத வீரர்களுக்கு டோனி வாய்ப்பு கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரகானே, ஸ்டுவர்ட் பின்னி, வருண் ஆரோன், மொகித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை.

தொடர்ந்து 4–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருப்பதால் டோனி மாற்றம் செய்யாமல் வெற்றி அணியே இருக்கலாம் என்று கருதுவதாகவும் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்றதால் நெருக்கடியில் உள்ளது. அந்த அணி பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் அணிகளிடம் தோற்று இருந்தது. இதனால் அந்த அணி இந்தியாவை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தோல்வி அடைந்தால் அந்த அணி வெளியேற்றப்படும்.

இரு அணிகளும் இதுவரை 8 போட்டியில் மோதியுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா 4 வெற்றியை பெற்றுள்ளன. 

No comments:

Powered by Blogger.