Header Ads

அஜித்துடன் இணையும் அனுஷ்கா, எமி..

தாண்டவம் படத்தில் விக்ரமுடன் நடித்த நடிகைகள் இருவரும் தற்பொழுது அஜித்துடன் நடிக்க உள்ளார்கள்.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விரைவில் ஆரம்பிக்க உள்ளது.

இதில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க ஹீரோயினை வலைப்போட்டு தேடி வந்தார் கௌதம் மேனன்.

முதலில் அனுஷ்காவை கேட்க அவர் தெலுங்கு படத்தில் பிஸியாக இருந்த காரணத்தினால் தள்ளிப்போட பாலிவுட் பக்கம் பார்க்க ஆரம்பித்தார் கௌதம். இடையில் சமந்தா அஜித் படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கௌதம் மேனனை சுத்தி சுத்தி வந்தார்.

ஆனால் நீதானே என் பொன்வசந்தம் படம் தோல்வியை கருதி சென்டிமெண்ட் பார்த்து சமந்தாவிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்துவிட்டார் கௌதம் மேனன்.

தற்போது முதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயமாக அமைந்தது கௌதம் மேனனிற்கு அனுஷ்காவே அஜித் படம் என்பதால் எப்படியோ தெலுங்கு படத்தை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு கால்ஷீட் கொடுத்துவிட்டாராம்.

முதல் ஹீரோயின் ஓகே என இரண்டாவது ஹீரோயினுக்காக மீண்டும் பாலிவுட் பக்கம் கவுதம் மேனன் தூண்டிலை போட பாலிவுட் பக்கம் ஏன் போகவேண்டும் என்று அஜித் தரப்பே வந்து எமிஜாக்சனை கைகாட்ட தற்போது இந்த இரண்டு ஹீரோயின்களும் இப்படத்தில் நடிக்க போவதாக முடிவாகிவிட்டதாம்.

No comments:

Powered by Blogger.