Header Ads

2014ம் ஆண்டு களம் இறங்கும் முன்னணி கதாநாயகர்கள்

இந்த 2014ம் ஆண்டு தமிழக சினிமா ரசிகர்களுக்கு சிறப்பானதொரு ஆண்டாக அமையும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஏனெனில் எதிர்பார்ப்புக்குரிய முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் இவ்வருடத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த உள்ளன. இப்பட்டியலில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

முதலில் உலக நாயகன் கமல்ஹாசனின் 3 திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகவுள்ளன. மிகப்பெரும் சர்ச்சையையும் வெற்றியையும் பெற்ற விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசிற்கு தயாராக உள்ளது. இதனையடுத்து இரு வேடங்களில் நடிக்கும் உத்தமவில்லன், மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார். 

அடுத்த படியாக உலகமெங்கும் மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் படமும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரம் வெற்றிக்கு பிறகு கௌதம்மேனனின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் விஜய்யின் கத்தி, விக்ரமின் ஐ, சூர்யாவின் அஞ்சான், விஷாலின் நான் சிகப்பு மனிதன், ஆர்யாவின் மீகாமன், தனுஷின் வேலையில்லா பட்டதாரி, சிம்புவின் வாலு, வேட்டை, விஜய் சேதுபதியின் மெல்லிசை மற்றும் பெயரிடப்படாத படங்கள், சிவகார்த்திகேயனின் மான்கராத்தே, ஜெயம் ரவியின் பூலோகம் போன்ற படங்களும் இவ்வருடம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் காமெடி கிங் கவுண்டமணியின் 49ஓ, வடிவேலுவின் தெனாலிராமன் ஆகிய படங்களும் இப்பட்டியலி்ல் உள்ளன. மேலும் வளர்ந்து வரும் நடிகர்களான நகுல், விமல், கௌதம் கார்த்திக், விக்ரம் பிரபு, பிரசன்னா, ஷக்தி, சிபிராஜ், ஸ்ரீகாந்த், பரத், சாந்தனு ஆகியோரின் படங்களும் இந்தாண்டு வெளியாகவுள்ளன.

No comments:

Powered by Blogger.