Header Ads

நடிகை மனோரமா உடல் நிலை கவலைக்கிடம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பழம்பெரும் நடிகை மனோரமா. அன்பேவா, தில்லானா மோகனம்பாள்,திருவிளையாடல், சரஸ்வதி சபதம், ராஜ ராஜ சோழன் , பாட்டி சொல்லை தட்டாதே,சின்ன கவுண்டர்,நாட்டாமை உள்பட.மனோரமா ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  உடல் நலக் குறைவால் ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே அவருக்கு மூட்டு வலி இருந்தது. பாத்ரூமிலும் தவறி விழுந்தார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு குணமானார். ஆனாலும் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.

இந்த நிலையில் மனோரமாவுக்கு நேற்று மாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு விட திணறினார். உடனடியாக அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். உடல் பரிசோதனையும் நடந்தது. மனோரமா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலையும் டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற paaராடுகிறார்கள்.

மாலையிட்ட மங்கை ப்டம் மூலம்  1958-ல் அறிமுகமானார். முன்னால் முதல்-அமைச்சர் கள் எம்.ஜி.ஆர், கருணாநிதி, சிவாஜி கணேசன் உளபட பல் பிரபல நடிகர்கள் முதல் தற்போதை பிரபல ங்கள்  நடித்தவர்  ரஜினி, கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், மற்றும் இளம் நடிகர்களுடன் நடித்தவர்.

No comments:

Powered by Blogger.