Header Ads

வாக்காளர்களிடம் ரூ.200 கொடுத்து அதிமுகவுக்கு ஓட்டு போடச் சொன்ன எஸ்ஐ கன்னத்தில் ‘பளார்’

திருவெறும்பூர்: திருச்சி அருகே வாக்குச்சாவடியில் வரிசையில் நின்ற வாக்காளர்களிடம் அதிமுகவுக்கு ஓட்டுப்போடச் சொல்லி ரூ.200 விநியோகித்த ஓய்வு பெற்ற எஸ்ஐ கன்னத்தில் சிறப்பு எஸ்ஐ அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்து பத்தாளப்பேட்டை அருகே உள்ளது கோட்ராப்பட்டி. இங்குள்ள தொடக்கப்பள்ளியில் வாக்காளர்கள் நேற்று காலை வாக்கு அளித்து கொண்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் சப்-இன்ஸ்பெக்டர் (ஓய்வு) நடராஜன் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது, வரிசையில் நின்றவர்களிடம் ரூ.200 கொடுத்து அதிமுகவுக்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார். இதனை தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கவனித்து, தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்ணாவிலும் ஈடுபட்டனர். தகவலறிந்த மத்திய ரிசர்வ் படை போலீசார் அங்கு சென்று, எஸ்ஐ நடராஜனை அங்கிருந்து விசாரித்தனர். பின்னர், வேனில் ஏறுமாறு கூறினர். ஆனால், வேனில் ஏறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். இதனால், ஆத்திரமடைந்த சிறப்பு எஸ்ஐ ஒருவர், எஸ்ஐ நடராஜனின் கன்னத்தில் ‘பளார்‘ என்று அறைவிட்டார். அதன்பின், மத்தியபடை போலீசார் வந்த வேனில் நடராஜன் ஏறினார். இதன்பின் அங்கிருந்து வேன் புறப்பட்டுச் சென்றது.

No comments:

Powered by Blogger.