Header Ads

நாளை 7 படங்கள் ரிலீஸ்: கார்த்திக், மம்முட்டி வாரிசுகள் மோதுகிறார்கள்

நாளை (ஏப் 25) 7 படங்கள் ரிலீசாகிறது. இதில் கார்த்திக் மகன் கவுதம், மம்முட்டி மகன் துல்கரின் படங்கள் மோதுகிறது. தேர்தல் பரபரப்பு அடங்குவதாலும் இன்னும் இரண்டு வாரத்தில் கோச்சடையான் ரிலீசாக இருப்பதாலும் இந்த வாரம் மீடியம் பட்ஜெட் படங்களுக்கு சரியான நேரம் என்பதால் 7 படங்கள் வரை ரிலீசாகிறது.

கவுதம் கார்த்திக், நிகிஷா படேல், ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள படம் என்னமோ ஏதோ, சூப்பர் ஹிட்டான ஆல முதலாந்தி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக். ரவி தியாகராஜன் இயக்கி உள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். பி.வி.பிரசாத் தயாரித்து உள்ளார். கடல் படத்துக்கு பிறகு வரும் கவுதம் கார்த்திக்கின் அடுத்த படம். கடல் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்தப் படத்தின் முடிவு கவுதமின் கேரியரை முடிவு செய்ய இருக்கிறது.

காதலில் சொதப்புவது எப்படி படத்துக்கு பிறகு பாலாஜி மோகன் இயக்கி உள்ள படம் வாயை மூடி பேசவும். தமிழ், மலையாள மொழிகளில் தயாராகி உள்ள இந்தப் படத்தில் மம்முட்டி மகன் துல்கர் சல்மான் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நாசிம் நடித்திருக்கிறார். பாலாஜி மோகனின் இரண்டாவது படம், துல்கர் சல்மான் தமிழுக்கு அறிமுகம். திருமண அறிவிப்புக்கு பிறகு வரும் நஸ்ரியா படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் படத்திற்கு இருக்கிறது.

இதுதவிர ராமகிருஷ்ணன் இயக்கி நடித்துள்ள போங்கடி நீங்களும் உங்க காதலும் ரிலீசாகிறது. பிரச்னைக்குரிய தலைப்பு, முத்தக் காட்சி பிரச்னை என செயற்கையான பரபரப்புகளை கிளப்பி விட்டு ரிலீசாகிறது. 

No comments:

Powered by Blogger.