Header Ads

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூர் அணியை எளிதில் வென்றது ராஜஸ்தான்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று அபுதாபியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூர்-ராஜஸ்தான் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய பெங்களூர் அணி துவக்கம் முதலே தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் எதிர்பார்த்த அளவுக்கு ஸ்கோர் உயரவில்லை. அதிகபட்சமாக விராட் கோலி 21 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின்கள வீரர்களில் ஸ்டார்க் 18 ரன்களும், ராம்பால் 13 ரன்களும் எடுத்தனர். இதனால், அந்த அணி 15 ஓவர்களில் 70 ரன்களுக்குள் ஆல் ஆவுட் ஆனது.

ராஜஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய டாம்பே 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரிச்சர்ட்சன் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார்.

இதையடுத்து 71 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ரகானே சிறப்பாக விளையாடி 23 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தார். அதன்பின்னர் சாம்சன்(2), கருண் நாயர் (8) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், பொறுப்புடன் ஆடிய வாட்சன் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அடுத்த பந்தில் அபிஷேக் நாயர் 3 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். இதனால், ராஜஸ்தான் அணி 42 பந்துகள் மீதமிருந்த நிலையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாயர் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இப்போட்டியில் மொத்தம் 28 ஓவர்கள் வீசப்பட்டன. இதில் 141 ரன்கள் மட்டும் அடித்ததுடன், 14 விக்கெட்டுகள் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.