Header Ads

முரண்டு பிடிக்கும் முருகதாஸ், சட்டை பண்ணாத தயாரிப்பாளர்

முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்வது இப்போது கத்தி படத்துக்குத்தான் பொருந்தும். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படம் தொடங்குவதற்கு முன்பே தடங்கல் உண்டானது! ஏ.ஆர்.முருகதாஸுக்கு 20 கோடி, விஜய்க்கு 18 கோடி என நடிகர், நடிகை, டெக்னீஷியன்களுக்கு மட்டுமே 50 கோடிக்குமேல் சம்பளம் கொடுத்துள்ளார்கள். படத்தின் பட்ஜெட் 75 கோடியை தாண்டுவதால், சாட்டிலைட் ரைட்ஸை பெரும் தொகைக்கு விற்க முடிவு எடுத்து, ஒரு தனியார் டிவியிடம் பேசினாராம் ஐங்கரன் கருணா. அவர் எதிர்பார்த்தபடி பெரும்தொகைக்கு கத்தி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை வாங்கிக்கொள்ள முன் வந்திருக்கிறது அந்த டிவி!

தான் எண்ணியபடி சாட்டிலைட் பிசனஸ் முடிந்த சந்தோஷத்தில், இந்த விஷயத்தை இயக்குநர் என்ற முறையில் ஏ.ஆர்.முருகதாஸிடம் சொல்லி இருக்கிறார் தயாரிப்பாளர். அதைக் கேட்டதும், என்னைக் கேட்காமல் அந்த டிவிக்கு ஏன் சாட்டிலை ரைட்ஸ் விற்றீர்கள்? என்று டென்ஷனாகிவிட்டாராம் ஏ.ஆர்.முருகதாஸ். அதுமட்டுமல்ல, என் படத்தை எப்போதும் நான் ஒரு டிவிக்குத்தான் கொடுப்பேன். இந்தப்படத்தையும் அவர்களுக்கே கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். அப்படி இருக்கும்போது என்னைக் கேட்காமல் அந்த டிவிக்குக் கொடுத்தது ஏன்? என்றும் கடுப்படித்தாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

இயக்குநர் முருகதாஸ் எவ்வளவுதான் முரண்டு பிடித்தாலும் அதை சட்டை பண்ணாமல், ஏற்கனவே சொன்னபடி கத்தி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை அந்த டி.வி.க்குத்தான் கொடுப்பேன் என்று கண்டிப்புடன் சொல்கிறாராம் கருணா. இந்தப் பிரச்சனையினால் கத்தி படத்துக்க புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம்.

No comments:

Powered by Blogger.