Header Ads

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்ற மனைவி கைது

வில்லிவாக்கம் சிட்கோ நகர் 49–வது தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (40). ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பேபிகலா (40). இருவரும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த 2010–ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் திடீர் என்று இறந்து விட்டார். அதன்பிறகு பேபிகலாவுக்கு அம்பத்தூர் எம்.கே.பி. நகரைச் சேர்ந்த கவுரிசங்கர் (33) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்ற பேபிகலா கள்ளக் காதலன் மீது சரமாரி புகார் கூறினார்.

தன்னுடன் பழகி வந்த கவுரிசங்கருக்கு சமீபத்தில் வருவாய்துறையில் ஆய்வாளர் வேலை கிடைத்துள்ளது. இதனால் அவர் என்னை கைவிட்டு வேறு வசதியான பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். திருமண நிச்சயதார்த்தமும் நடந்து விட்டது. திருமணத்தை தடுத்து நிறுத்தி தன்னுடன் கவுரிசங்கர் சேர்ர்ந்து வாழ வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர், பேபிகலாவையும், கவுரி சங்கரையும் விசாரித்த போது இருவரும் தங்களிடையே நட்பு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி விவரித்தனர்.

அப்போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் குறை கூறினார்கள். உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த ராதாகிருஷ்ணனை கொலை செய்ததாகவும் உளறி கொட்டினார்கள். இந்த நிகழ்ச்சி டி.வி.யில் ஒளிபரப்பானபோது இதை ராதாகிருஷ்ணனின் தாயார் காஞ்சனா பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தனது மகனை கொலை செய்து விட்டார்களே என்று கதறி அழுதவாறு அவர் வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்தார்.

கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் அண்ணாநகர் துணை கமிஷனர் சேவியர் தன்ராஜ் வில்லிவாக்கம் உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி பேபி கலாவையும், கள்ளக்காதலன் கவுரிசங்கரையும் கைது செய்தனர்.

டி.வி. நிகழ்ச்சியின் மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளக்காதல் ஜோடி சிக்கியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இருவரிடமும் போலீசார் விசாரித்தபோது கொலையை ஒப்புக் கொண்டனர். மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியானது.

புதுப்பேட்டையில் உள்ள பேபிகலாவின் உறவினர் வீட்டில் கவுரிசங்கர் வாடகைக்கு குடியிருந்தார். உறவினரை பார்க்க சென்ற போது தேவிகலாவுக்கும், கவுரிசங்கருக்கும் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

அதன்பிறகு கள்ளக்காதல் ஜோடி எந்த இடையூறும் இல்லாமல் உல்லாசமாக இருந்து வந்தனர்.

கணவர் வேலைக்கு சென்றபிறகு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கவுரிசங்கர் அங்கு வந்து பேபிகலாவுடன் உல்லாசமாக இருந்து வந்தார். இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இது கள்ளக்காதல் ஜோடிக்கு இடையூறாக இருந்தது.

இதையடுத்து இருவரும் சேர்ந்து ராதாகிருஷ்ணனை தீர்த்தக்கட்ட முடிவு செய்தனர். கடந்த 17.7.2010 அன்று பேபிகலாவும் கவுரிசங்கரும் சேர்ந்து ராதாகிருஷ்ணன் போதையில் இருந்தபோது சினிமா பாணியில் முகத்தில் பிளாஸ்டிக் கவரால் இறுக கட்டி மூச்சு திணற வைத்து கொலை செய்தனர்.

பின்னர் கவுரிசங்கர் அங்கிருந்து சென்றதும் பேபிகலா கணவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக நாடகம் ஆடி உறவினர்களை நம்ப வைத்தார். இதனால் போலீசுக்கு தெரிவிக்காமல் உடலை உறவினர்கள் எரித்து விட்டனர்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் கவுரிசங்கருக்கு வருவாய் ஆய்வாளர் வேலை கிடைத்தது. திருப்பத்தூர் சென்று பணியாற்றினார். அரசு அதிகாரி வேலை கிடைத்ததும் கவுரிசங்கர் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. பேபிகலாவை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.

வசதியான இடத்தில் வேறு பெண் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தார். பெண் பார்த்து நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது. இதை அறிந்த பேபிகலா கள்ளக்காதலனை காட்டிக் கொடுத்ததுடன் தானும் கொலைப்பழியில் சிக்கிக் கொண்டார்.

இதற்கிடையே பேபி கலாவுக்கு புதுப்பேட்டை ஆயுதப்படையில் ஏட்டாக இருக்கும் தம்பிராஜன் (38) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், அவர்தான் கவுரிசங்கருடன் உள்ள நட்பை விட்டு விடுமாறு கூறியதாகவும், டி.வி. நிகழ்ச்சி யில் அவரை காட்டி கொடுத்து விடுமாறு சொன்னதாகவும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஏட்டு தம்பிராஜனிடமும் வில்லிவாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.