Header Ads

விஜய்யுடன் திருமணம் எதிரொலி, அமலா பாலை நீக்க முடிவு -

இயக்குனர் விஜய்யை மணக்க உள்ளதையடுத்து அமலா பால் நடிப்பதாக இருந்த படத்திலிருந்து அவரை நீக்க முடிவு செய்துள்ளனர். கிரீடம் இயக்குனர் விஜய், அமலா பால் காதல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதை பத்திரிகைகளில் பார்த்து தெரிந்துகொண்ட வாஸ்தா நீ வேணுகா என்ற தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த படத்திலிருந்து அமலாவை நீக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறும்போது, அமலா பால் திருமணம் செய்யப்போகிறார் என்பதை பத்திரிகைகளில் பார்த்தபிறகுதான் 

தெரிந்துகொண்டோம். இப்படம் காதலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்நிலையில் அமலா திருமணம் செய்துகொண்டால் அது படத்தை 
பாதிக்கும். எனவே அவரை நீக்க முடிவு செய்துள்ளோம் என்றனர். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தனர். தற்போது அந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பட ஒப்பந்தம் செய்தபோதுகூட திருமணம் பற்றி அமலாபால் தெரிவிக்கவில்லை என்பது இயக்குனர் ரமேஷ் வர்மாவுக்கு வருத்தம் அளித்திருக்கிறதாம். படத்துக்காக அமலா பால் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி தரும்படி அமலாவிடம் பட தயாரிப்பாளர்கள் கேட்டிருக்கின்றனர். 

No comments:

Powered by Blogger.