Header Ads

சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு பள்ளம் தோண்டும்போது அதிர்ச்சி பத்மநாபசுவாமி கோயிலில்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள ஏ முதல் எப் வரையிலான 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கோயிலை அரசு ஏற்க வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்நிலையில், பத்மநாபசுவாமி கோயில் விவகாரங்கள் குறித்து நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அவர்  கோயிலில் ஆய்வு நடத்தி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், மன்னர் குடும்பத்தினர் மற்றும் கோயில் ஊழியர்களுக்கு எதிராக நகை கடத்தல் உள்பட பரபரப்பு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதனால், கோயிலுக்கு மத்திய படை பாதுகாப்பு அளிக்கவேண்டும் எனவும் அறிக்கையில் கூறியிருந்தார். 

இந்த அறிக்கை தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது பத்மநாபசுவாமி கோயில் குறித்த கோபால் சுப்பிரமணியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல தகவல்கள் கடும் அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் உள்ளன என்று நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்த சூழ்நிலையில், கோயிலின் வடக்கு வாசல் முன் தானியங்கி தடு¢ப்பு வேலி அமைப்பதற்காக நேற்று தொழிலாளர்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது படிக்கட்டுகள் தென்பட்டன. தொடர்ந்து தோண்டிய போது 3 படிக்கட்டுகள் தென்பட்டன. இதையடுத்து தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசா ரும் கோயில் நிர்வாகிகளும் சம்பவ இடம் வந்து ஆய்வு நடத்தினர். அவை சுரங்கப்பாதை படிக்கட்டுகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தடுப்பு வேலி அமைக்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. 

No comments:

Powered by Blogger.