Header Ads

விஜய் சேதுபதியின் டவுசர் காலம்!

வித்தியாச நாயகனாய் தமிழ் சினிமாவில் வெரைட்டி விருந்து படைக்கும் விஜய் சேதுபதியின் டவுசர் காலத்தைக் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமா?

  மேக்-அப் அதிகமாய் போட்டு ஸ்கூலுக்கு வரும் டீச்சரைப் பார்த்து 'ப்ப்பா..!’ சொல்லி வெளு வாங்கியிருப்பார்.

 'ஏன் ஹோம் ஒர்க் செய்யலை?’ என்று டீச்சர் கேட்டால், 'வீட்டுக்குப் போனேனா... நோட்டைப் பிரிச்சேனா...பேனாவை எடுத்தேனா... என்னாச்சு... ஆங்... கரன்ட் போச்சு’ என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லி தலையைக் கிறுகிறுக்கவைத்திருப்பார்.

 சீட்டுக்கட்டு விளை யாட்டில் அப்போதே ரம்மி சேர்க்க முடியாமல் தவிச்சிருப் பார்.

 கிளாஸ் லீடராய் இருந்திருப்பார். ஆசிரியர் இல்லாத போது வகுப்பைப் பார்த்துக் கொள்வதோடு ஐந்து விதிமுறைகள் எழுதி கிளாஸும் எடுத் திருப்பார்.

 ஸ்கூல் டிராமாக்களில் எந்த வேடம் என்றாலும் ஓகேதான். எல்லாவற்றிலும் செமையாய் ஸ்கோர் செய்து அசத்தி இருப்பார்.

 தப்பு செய்ததைத் தட்டிக்கேட்டால், 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். பின் தர்மம் மண்ணைக் கவ்வும்’ என்று புதிதாய் தத்துவம் பேசிக் குழப்பியிருப்பார்.

 தான் ஃபெயிலானபோதும் பெஞ்சில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் கேர்ள்ஃப்ரெண்ட்ஸ் பாஸானால் 'ஹேப்பி அண்ணாச்சி’ என்று ஊரெல்லாம் சொல்லித் திரிந்திருப்பார்.

 'கணக்குல ஃபெயிலு. நண்பன் ஃபீலாகிட்டாப்ல... ரேங்க் கார்டுல கையெழுத்துப் போட்டா கூல் ஆகிடுவாப்ல’ என்று தன் ஃப்ரெண்டை விட்டு அப்பாவை கரெக்ட் செய்திருப்பார்.

 ஸ்கூலிலிருந்து வீடு வரைக்கும்  இவரைத் திட்டும். ஆனால் இவருக்குப் பிடிச்ச ஒரே வார்த்தை 'பொறம்போக்கு’.

 விரும்பிச் சாப்பிடும் உணவு. வேறென்ன... பீட்ஸாதான்!

No comments:

Powered by Blogger.