Header Ads

ஹன்சிகா திடீர் கண்டிஷன் இயக்குனர்கள் ஷாக்

தனுஷுடன் மாப்பிள்ளை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான ஹன்சிகா, கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்ததுடன், சக ஹீரோயின்களையும் திணறடித்தார். நெருக்கமான காட்சிகள், முத்தக்காட்சி என்று ஜமாயத்தார். இதையடுத்து ஸ்கிரிப்ட் உருவாக்கும்போது ஹன்சிகாவை மனதில் வைத்து கேரக்டர்களை வடிவமைத்தனர் இயக்குனர்கள். ஹன்சிகாவுக்கும் படங்கள் வேகமாக புக் ஆகின. இந்நிலையில் ஹன்சிகாவுக்கு சிம்ரன் உள்ளிட்ட சில மாஜி ஹீரோயின்களுடன் நட்பு ஏற்பட்டது. அவர்கள் ஹன்சிகாவுக்கு ஐஸ் வைத்து பேசி குளிர வைத்தனர். நீ நன்றாக நடிக்கிறாய், பிறகு எதற்கு கவர்ச்சியாக நடித்து பெயரை கெடுத்துக்கொள்கிறாய் என்று அட்வைஸ் தந்தனர். 

இதையடுத்து ஹன்சிகா தனது நடிப்பு பாணியை மாற்ற முடிவு செய்திருக்கிறார். இதற்கிடையில் சுந்தர்.சி இயக்கும் அரண்மனை படத்தில் தெய்வசக்தி உள்ள கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதால், காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைபோல் ஆகிவிட்டது நிலைமை. கிளாமர் ஹீரோயினாக நடிக்க கேட்டு வரும் இயக்குனர்களுக்கு கால்ஷீட் இல்லை என்று ஹன்சிகா கைவிரிப்பதுடன், கவர்ச்சியைவிட நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களைத்தான் இனி ஏற்பேன் என்று கண்டிஷன் போடுகிறாராம். 

இதைக்கேட்டு இயக்குனர்கள் ஷாக் ஆகி உள்ளனர். ஹன்சிகா, கிளாமருக்கு டாடா காட்டுவதால் அவருக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தமன்னா, நயன்தாராவுக்கு செல்கிறதாம்.

No comments:

Powered by Blogger.