கல்யாணமா... அய்யய்யோ... ரொம்ப பதறுகிறார் பாவனா
கல்யாணம் செய்து கொள்ளணும்னு நினைத்தாலே எனக்கு ரொம்ப பயமாக இருக்கு... என்கிறார் பாவனா.ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாவனா. எப்ப கல்யாணம் என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது: தற்போது தமிழில் நடிக்கா விட்டாலும் மலையாளம், கன்னட படங்களில் நடிக்கிறேன். முதன் முதலில் நடிக்க ஆரம்பித்த போது நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைத்து முக்கியத்துவம் இல்லாத சாதாரண வேடங்களில் நடித்தேன். அது எனக்கு மைனஸாகி விட்டது. இப்ப அதிக படங்களில் நடிப்பதைவிட நல்ல வேடங்களில் நடிப்பது முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறேன். அதனால், படங்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களை மட்டுமே ஏற்று நடிக்கிறேன். இதனால்தான், கடந்த ஆண்டு மலையாளத்தில் நான் நடித்து 2 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆனது.
தற்போது மலையாளம், கன்னடம் என 3 படங்களில் நடித்து வருகிறேன். திருமணம் எப்போது என்றுதான் எல்லோரும் அடிக்கடி கேட்கிறார்கள். எனக்கு 27 வயதுதான் ஆகிறது. பாலிவுட் நடிகைகள் 35 வயதுக்கு பின்னாடிதான் கல்யாணம் பண்றாங்க. நான் மட்டும் ஏன் அவசரப்பட வேண்டும்? எனக்கு அம்மா, அப்பா, அண்ணன்தான் எல்லாம். கல்யாணம் செய்துகொண்டு அவர்களை பிரிந்து வாழ்வதை நினைத்தாலே ரொம்ப பயமாக இருக்கிறது.
சில பேர், உங்களுக்கு ரகசிய காதலன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள். காதல் என்பது வாழ்வின் ஒரு அங்கம்தானே? எனக்கு ரகசிய காதலன் இருந்தால் அதை எப்பவாது சொல்லத்தான் போகிறேன். ஆனால், கண்டிப்பாக ரகசிய திருமணம் செய்துகொள்ள மாட்டேன்.
No comments: