தைவான் கடற்கரையில் நீச்சலுடையில் இருந்த ஹன்சிகாவை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் !
சிவகார்த்திகேயன் - ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 'மான் கராத்தே படத்தின் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி அது ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றது. வரிசையாக மூன்று ஹிட் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன், தமிழில் முன்னணி இடத்தில் உள்ளஹன்சிகாஆகிய இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்வதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது.
படத்தில் வெளியிட பல விநியோகிஸ்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மான் கராத்தே படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தைவான் நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இரண்டு பாடல் காட்சிகளும், ஒரு சண்டைக்காட்சியும் எடுக்க உள்ளனர்.
ஒரு பாடல்காட்சியில் ஹன்சிகாஅணிந்து கடலில் குளிப்பது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டதாம். அப்போது தைவானில் இருந்த தமிழர்கள் ஹன்சிகாவை அடையாளம் கண்டுகொண்டு அவரிடம் ஆட்டோகிராப் வாங்கிச்சென்றதை ஹன்சிகா பெருமையாக கூறினாராம்.
மேலும் இந்த காட்சியில் சிவகார்த்திகேயன் - ஹன்சிகா கெமிஸ்ட்ரி மிக அற்புதமாக இருந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை அமைத்திருப்பதால் படத்தின் வெற்றி உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் கூட்டணி சக்ஸஸ் கூட்டணி என்ற பெயரெடுத்துள்ளதால் மீண்டும் ஒருமுறை ஒரு மிகப்பெரிய ஹிட்டை எதிர்பார்க்கலாம். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் திருக்குமரன் இயக்கி வருகிறார்.
No comments: