Header Ads

அஜீத்தின் மகளா நஸ்ரியா? : கோலிவுட்டில் பெரும் பரபரப்பு

சமீபத்தில் தொப்புள் பிரச்சனையில் பரபரப்பு ஏற்படுத்திய நடிகை நஸ்ரியா, தற்போது அஜீத் குறித்து தனது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அஜீத்துடன் நடிக்கவேண்டும் என்பது ஒன்றுதான் எனது சினிமா வாழ்வின் லட்சியம். அவருக்கு ஹீரோயினியாக நடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவருக்கு தங்கையாகவோ அல்லது மகளாகவோ நடித்தால் கூட என்னுடைய ஆசை நிறைவேறிவிடும். அந்த வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

42 வயதான அஜீத்துக்கு 19 வயது ஆன நஸ்ரியா மகளாக நடிக்க நினைத்து அவர் கூறிய கருத்துக்கள் அஜீத் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளதாக சமூக இணையதளங்களில் வரும் விமர்சனங்களில் இருந்து தெரிகிறது. 

நிஜத்தில் அஜீத்துக்கு ஆறு வயதே ஆன மகள் இருக்கும்போது, 19 வயதுடைய இவர் அஜீத்துக்கு மகளாக நடிக்கிறேன் என்று கூறியிருப்பதன் மூலம் தங்கள் தல'யை வயதானவர் என்று மறைமுகமாக கேலி செய்கிறாரா? என்கிற ரீதியில் நஸ்ரியாவை கடுமையான வார்த்தைகளால் கண்டித்து வருகின்றனர்.

இதனால் நஸ்ரியா அதிர்ச்சி அடைந்துள்ளார். தான் அஜீத்தின் வெறித்தனமான ரசிகை என்ற விதத்தில் அவருடன் எப்படியாவது ஒருபடம் நடிக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் அந்த கருத்தை கூறியதாகவும், அவரை கேலி செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லையென்றும் விளக்கமளித்துள்ளார்.

தொப்புள் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்த நஸ்ரியா, மிண்டும் 'தல' பிரச்சனையில் சிக்கி திண்டாடுவதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

No comments:

Powered by Blogger.