பாரதிய ஜனதாவில் நமீதா? : பாராளுமன்ற தேர்தலில் சூறாவளி பிரச்சாரம்
நடிகை நமீதா அரசியலில் குதிக்க இருப்பதாகவும் அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நடிகை நமீதா விஜயகாந்த் நடித்த 'எங்கள் அண்ணா' படத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு அறிமுகமானார். குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த 32 வயது நமீதாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், அஜீத்துடன் பில்லா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த வந்த நமீதா, சமீப காலமாக வாய்ப்புகள் இன்றி தொலைக்காட்சி மட்டும் சில நிகழ்ச்சிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை குஷ்பூ மாதிரி இவருக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது. அரசியலில் குதித்து சமூகசேவை செய்ய விரும்புவதாக சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
நேற்று திருச்சியில் நடந்த ஒரு விழாவுக்கு வந்த நமீதா அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தினாலும் இந்திய அளவில் அந்த கட்சி பிரபலமடைய பல வருடங்கள் ஆகலாம். எனவே தற்போதைய நிலையில் நாட்டை நல்ல முறையில் வழிநடத்தி செல்ல பாரதிய ஜனதாவே சிறந்த கட்சியாகும். தமிழக அளவில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று கூறினார்.
நமீதா பாரதிய ஜனதாவில் சேருவதற்கு பேச்சுவார்த்தைநடந்து கொண்டு இருப்பதாகவும், அடுத்த முறை மோடி தமிழகம் வரும்போது அவர்முன் நடிகை நமீதா பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் செய்வார் என்றும் கூறப்படுகிறது.
No comments: