Header Ads

ஹைதராபாத்தில் தனுஷ் பொங்கல்

பொங்கல் விழாவை ஹைதராபாத்தில் கொண்டாடுகிறார் தனுஷ்.
கே.வி.ஆனந்த் இயக்கும், ‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் அழகி அமீரா நடிக்கிறார்.

நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களில் தனுஷ் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்னும் சில நாட்கள் நடைபெறவிருப்பதால் இந்த வருட பொங்கலை ‘அனேகன்’ யூனிட்டுடன் ஹைதராபாத்தில் கொண்டாட இருக்கிறார்.

ரொமான்டிக் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

No comments:

Powered by Blogger.