Header Ads

ஆமா.. எனக்கு கல்யாணம்தான் மீரா ஒப்புதல்

ஆமாங்க எனக்கு கல்யாணம்தான் என்று திருமணத்தை உறுதி செய்தார் மீரா ஜாஸ்மின். ரன், சண்டகோழி மம்பட்டியான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் மீரா ஜாஸ்மின். இவருக்கும் மாண்டலின் இசை கலைஞர் ராஜேஷுக்கும் காதல் என்று தகவல் வெளியானது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சென்றனர். இந்நிலையில், அவர்கள் காதல் முறிந்தது. இதையடுத்து திருமணம் பற்றி மவுனம் காத்து வந்தார் மீரா. இந்த சூழலில் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனாலும் அவரது ரீஎன்ட்ரி சர்ச்சைகளை உள்ளடக்கியதாக இருந்தது. மலையாள நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர நிகழ்ச்சியை புறக்கணித்ததால் அவர் மீது சங்கம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து அவருடன் படங்களில் ஜோடியாக நடிப்பதை மல்லுவுட் ஹீரோக்கள் தவிர்த்தனர். 

அதையும் மீறி அவருக்கு படங்கள் வந்தன. தமிழில் இங்க என்ன சொல்லுது என்ற படத்தில் நடிப்பதுடன், மலையாளத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த டைட்டஸ்-சுகுதகுமாரி மகன் அனில் டைட்டஸுக்கும், மீரா ஜாஸ்மினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக உள்ளார் அனில். 

இவர்களின் திருமண தகவல் வெளியானாலும் இதுகுறித்து மீரா ஜாஸ்மின் மவுனம் காத்து வந்தார். தற்போது அனிலுடனான திருமணத்தை உறுதி செய்திருக்கிறார். ஆமாங்க பிப்ரவரி 12ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள பாளையம் எல்எம்எஸ் சர்ச்சில் எங்கள் திருமணம் நடக்க உள்ளது என்றார். 

No comments:

Powered by Blogger.