வழக்குகளால் சர்ச்சை சென்சார் பெண் அதிகாரி மாற்றம்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் தவிர பாலிவுட் படங்களும் சமீபகாலமாக தணிக்கையின்போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் பல தயாரிப்பாளர்கள் கோர்ட் வரை செல்கின்றனர். இது சென்சார் போர்டில் சர்ச்சையை ஏற்படுத்தி யது. இதுவரை சென்சார் போர்டு தலைமை செயல் அதிகாரியாக பங்கஜா தாகூர் என்ற பெண் செயல்பட்டு வந்தார். தற்போது அவர் திடீரென மாற்றப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே அவர் பொறுப்பிலிருந்த கஸ்டம்ஸ் மற்றும் சென்டிரல் எக்சைஸ் துறைக்கே மாற்றப்பட்டு இருக்கிறார். தற்போது ராகேஷ்குமார் என்பவர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
No comments: