டுவிட்டர் இணைய தளத்தில் விஜய்யை அவதூறாக திட்டியவர் போலீசில் சிக்கினார்
இன்டர் நெட்டில் வெவ்வேறு நடிகர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று விஜய் வற்புறுத்தி வருகிறார். இந்த போக்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் கூறி உள்ளார். இந்த நிலையில் ரசிகர்களுடன் டுவிட்டர் இணைய தளம் மூலம் இரு தினங்களுக்கு முன் நேரடியாக அவர் கலந்துரையாடினார்.
ரசிகர்கள் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்தார். ரசிகர்கள் தங்கள் வேலையையும் குடும்பத்தினரையும் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை சொன்னார். அப்போது ஒருவர் குறுக்கிட்டு விஜய்யை அவதூறாக திட்டினார். இதனால் விஜய்யும் அவரது ரசிகர்களும் அதிர்ச்சியானார்கள். அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொருப்பாளர் என். ஆனந்த் ரசிகர் மன்றத்தினரை தொடர்பு கொண்டு அவதூறாக பேசியவரை கண்டுபிடிக்கும்படி அறிவுறுத்தினார்.
அந்த நபர் பட்டாபிராமை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. திருவள்ளூர் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொருப்பாளர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன் தலைமையில் ரசிகர்கள் அவதூறாக பேசியவர் வீட்டை முற்றுகையிட்டனர். அவரை பிடித்து பட்டாபிராம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பெயர் கணேஷ் என்பது தெரிய வந்தது.
போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தயாரானார்கள். இதுபற்றிய தகவல் விஜய்க்கு தெரிந்ததும் அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் விட்டு விடும்படியும் கேட்டுக் கொண்டார். இதனை விஜய் மக்கள் இயக்க பொருப்பாளர் என்.ஆனந்த் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து ரசிகர்கள் வழக்கை வாபஸ் பெற்றனர். வாலிபர் விடுவிக்கப்பட்டார்.
No comments: