Header Ads

உ படத்தில் மத உணர்வை புண்படுத்தவில்லை இயக்குனர் பதில்

பிள்ளையார் சுழி எனப்படும் உ பட டிரைலரில் மத உணர்வுகளை புண்படுத்தவில்லை என்றார் இயக்குனர். உ என்ற பெயரில் புதிய படம் உருவாகி உள்ளது. தம்பி ராமையா, ஆஜித், வருண், நேஹா, மதன் கோபால், மதுமிதா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அபிஜித் ராமசாமி இசை அமைத்திருக்கிறார். ஆஷிக் இயக்குகிறார். நந்தகுமார், பி.ராமசாமி, அசோக்குமார் தயாரித்திருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டது. அப்போது இயக்குனர் ஆஷிக் கூறியதாவது: நல்ல காரியங்கள் தொடங்கும்போது உ என பிள்ளையார் சுழி போட்டுத்தான் ஆரம்பிப்பார்கள். அந்த காலத்தில் நல்ல ஓலைச்சுவடியை தேர்ந்து எடுக்க உ என்று எழுதித்தான் சோதிப்பார்கள். 

அதைத்தான் இப்படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறோம். கணேஷ் என்ற கேரக்டரும், தம்பிராமையாவும் முதன்முதலாக தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள எடுக்கும் முயற்சிகள்தான் கதை. இப்படத்தின் டிரைலரில் உ என்று டைட்டில் வரும்போது அதற்கு கீழே அடிக்கோடு வரையும்போது  வாயு வெளியேறுவதுபோல் இசை வருவது மத உணர்வை புண்படுத்துவதுபோல் உள்ளதே என்கிறார்கள். அப்படி எந்த நோக்கத்திலும் இது அமைக்கப்படவில்லை. 

தொடக்கம் முதல் இறுதிவரை இக்கதை நகைச்சுவையாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் பணியாற்றி இருக்கும் டெக்னீஷியன்கள் 25 வயதுக்குள் உள்ள இளைஞர்கள்தான். சிறுவன், சிறுமி காதலிப்பதுபோல் காட்டப்படுவதற்கும் ஆட்சேபம் தெரிவிக்கிறார்கள். அவர்கள் காதலிக்கவில்லை. அதற்கான விளக்கம் படத்தில் இருக்கிறது. இவ்வாறு ஆஷிக் கூறினார். 

No comments:

Powered by Blogger.