Header Ads

விரைவில் படம் தயாரிப்பேன்: சிம்ரன்

நடிகை சிம்ரன் தயாரிப்பாளராகிறார். தற்போது அவர் படங்களில் நடிக்க வில்லை. தயாரிக்க போகும் படத்தை யாரை வைத்து இயக்குவது மற்றும் கதை போன்றவை குறித்து ஆலோசித்து வருகிறார். இதுகுறித்து சிம்ரன் அளித்த பேட்டி வருமாறு:– 

நான் படம் தயாரிக்க உள்ளேன். இதற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கிறது. தமிழ் திரையுலகில் ஹன்சிகா சிறந்த நடிகையாக உள்ளார். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். கவர்ச்சி, அழகு, நடனம் அனைத்திலும் சிறந்தவராக உள்ளார். எனது இரு குழந்தைகளுடனும் தற்போது நேரத்தை செலவிடுகிறேன். தாய்மை என்பது உயர்வான விஷயம். எனது பலமே என்னுடைய மகன்கள் தான். அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை விரும்புகிறேன். சொந்த வாழ்க்கையிலும் தொழிலிலும் முழு ஈடுபாடு காட்டுகிறேன். 

இவ்வாறு சிம்ரன் கூறினார்.

No comments:

Powered by Blogger.