Header Ads

ஆஸ்திரேலியாவில் மகள் பிறந்த நாளை கொண்டாடும் அஜீத்

அஜீத் ‘வீரம்’ படத்தை முடித்து விட்டு ஓய்வெடுக்க ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவருடன் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்காவும் சென்று இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை அங்கேயே கொண்டாடினார்கள். 

தற்போது புத்தாண்டையும் அனோஷ்கா பிறந்த நாளையும் அங்கேயே கொண்டாட முடிவு செய்துள்ளனர். சிட்னியில் இருந்து வெலிங்டன் வரை செல்லும் சொகுசு கப்பலில் மனைவி மகளுடன் அஜீத் பயணம் செய்கிறார். அந்த கப்பலிலேயே புத்தாண்டையும் அனோஷ்காவுக்கு பிறந்த நாளையும் கொண்டாடுகிறார்கள்.

வருகிற 9–ந்தேதி அஜீத் சென்னை திரும்புவார் என எதிர் பார்க்கப்படுகிறது. 10–ந்தேதி வீரம் படம் ரிலீசாகிறது. அதன் பிறகு கவுதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

No comments:

Powered by Blogger.