Header Ads

சண்டைக்கோழி கார்த்திகா

புறம்போக்கு படத்திற்காக சண்டைப்பயிற்சி எடுத்து வருகிறாராம் கார்த்திகா.
இயற்கை, ஈ, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புதிய படம் புறம்போக்கு.

சமூக நோக்கத்துடன் அவர் இயக்கும் இந்த படத்தில் ஆர்யா-விஜயசேதுபதி நடிக்கிறார்கள்.

இப்படத்தில் ஒரு முக்கிய போலீஸ் அதிகாரி வேடத்துக்கான நடிகர் தேடி வந்த ஜனநாதன், இப்போது தனது இயற்கை படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்த ஷாமை அந்த வேடத்துக்கு செலக்ட் பண்ணியிருக்கிறார்.

மேலும் இப்படத்தில் ஹீரோயினாக கார்த்திகா தெரிவாகியுள்ளார், அவர் வழக்கமான கதாநாயகிகளைப்போல் இல்லாமல் ஒரு ஆக்சன் ரோலில் நடிக்கிறாராம்.

அதனால் அவருக்கு தற்போது தீவிர சண்டை பயிற்சி அளித்து வருகிறார்கள். மொத்தத்தில் கதைப்படி எந்த நடிகர்களுக்கும் ஜோடியாக இல்லாமல், கார்த்திகாவும் ஒரு மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறாராம்.

No comments:

Powered by Blogger.