Header Ads

ஆஸ்கார் விருது போட்டியில் விஜய் பிரகாஷ் பாடிய பாடல்

இந்தியாவிற்குப் பெருமைகளை அள்ளித்தந்த 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தில் இசை அமைப்பாளரும், பாடகருமான விஜய் பிரகாஷ் பாடியிருந்த 'ஜெய் ஹோ' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் பாடியுள்ள மற்றொரு பாடலும் இந்த ஆஸ்கார் விருதுத் தேர்வுப் பட்டியலில் அனுப்பப்பட உள்ளது என்பது அவருக்கு மீண்டும் ஒரு உயர்வைத் தந்துள்ளது. 86-வது ஆஸ்கர் அகாடமி விருது பரிசீலனைக்காக அனுப்பப்பட உள்ள ஐந்து பாடல்களில் இவர் 'காமசூத்ரா 3டி' என்ற படத்தில் கொடுத்துள்ள 'சாவரியா' என்ற பாடலும் ஒன்றாகும்.

எனது மற்றொரு பாடல் ஆஸ்கர் விருது பரிசீலனைக்குப் போகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. விருதுகளை மனதில் வைத்துக் கொண்டு இசையைப் பதிவு செய்வதில்லை. ஆனால் இந்த விருது பரிசீலனை நிகழ்ச்சியின் மூலம் உலகளாவிய ரசிகர்களை இந்தப் பாடல் சென்று சேரும் என்பது மகிழ்வைத் தருகின்றது என்று விஜய் பிரகாஷ் குறிப்பிட்டார்.

'காமசூத்ரா 3டி' படப்பாடல்கள் ஸ்ரீஜித் மற்றும் சச்சினால் இசையமைக்கப்பட்டன. இந்தப் பாடல் பாரம்பரியமும் கலந்து ஏராளமான சங்கதிகளையும் கொண்டிருந்தது. அவர்களுக்கு என்ன தேவை என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள். எனக்கும் அவர்களுடன் வேலை செய்தது சந்தோஷத்தைக் கொடுத்தது என்று விஜய் குறிப்பிட்டார்.

No comments:

Powered by Blogger.