Header Ads

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கிறது ‘ஜெயம்’ ரவியின் ‘நிமிர்ந்து நில்’

சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘நிமிர்ந்து நில்’. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்நிலையில், இப்படம் பெர்லினில் நடைபெறும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. இது படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தகவலை ஜெயம் ரவி புத்தாண்டையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருக்கிறார். அவர் கூறும்போது, ரசிகர்களுக்கும், ‘நிமிர்ந்து நில்’ படத்தில் நடித்த சக நடிக, நடிகையருக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த படம் என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான படம். 

இப்படம் வருகிற பிப்ரவரி 14-ம் தேதி பெர்லினில் நடைபெறும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தரத்துக்கு ஏற்ப, படத்துக்கு இத்தகைய அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது. புதுவருடம் எனக்கு இனிமையாக அமைய உள்ளது. மேலும் பல நல்ல சேதிகள் இந்த வருடம் வரப்போவது நிச்சயம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.