Header Ads

கள்ளக்காதலனுடன் மனைவி தலைமறைவு : வியாபாரி கொலை வழக்கில் மேலும் 6 பேர் பிடிபட்டனர்

சென்னை: கூடுவாஞ்சேரி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீஸ்காரர் மகனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலனை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரங்கன் (42). மளிகை கடைக்காரர். இவரது மனைவி லட்சுமி (33). கடந்த 9ம் தேதி இரவு வீட்டிலிருந்த ரங்கனும், மனைவி லட்சுமியும் மாயமாகினர். ரங்கனின் தம்பி ராஜேந்திரன் புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீசார் இருவரையும் தேடி வந்தனர். 2 மாதங்களுக்கு முன்பு கார் திருட்டு வழக்கில் கைதான திருப்போரூர் அடுத்த மேலையூரை சேர்ந்த போலீஸ்காரர் சந்திரனின் மகன் சதீசுக்கும், லட்சுமிக்கும் கள்ள தொடர்பு இருந்தது. இருவரும் ரங்கனை கொலை செய்து இருக்கலாம் என ரங்கனின் தம்பி ராஜேந்திரன் தெரிவித்திருந்தார். போலீசார் சந்தேகத்தின்படி சதீஷ் தந்தை சந்திரன், உறவினர் பெண் உள்பட 7பேரை பிடித்து விசாரித்தனர். 

இந்நிலையில் கடந்த 12ம் தேதி கோவளம் அடுத்த முட்டுக்காடு கால்வாயில் வெட்டு காயங்களுடன் அழுகிய நிலையில் ரங்கனின் சடலம் மீட்கப்பட்டது. கள்ளக்காதலனும், மனைவியும் சேர்ந்து ரங்கனை கொலை செய்து முட்டுக்காடு கால்வாயில் வீசியது தெரிந்தது. இதுதொடர்பாக, திருப்போரூர் அருங்குன்றம் பகுதியை சேர்ந்த புறா என்ற சந்திரசேகர் (29), திண்டிவனம் அடுத்த ஓங்கூர் பகுதியை சேர்ந்த பாண்டியராஜ் (21) ஆகியோரை 13ம்தேதி போலீசார் கைது செய்தனர். மேலும் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22), ராஜிவ்காந்தி(31), வண்டலூர் அடுத்த நெடுங்குன்றத்தை சேர்ந்த பார்த்தீபன் (25), உதயா என்ற உதயராஜ் (28), திருக்கழுக்குன்றம் தட்சிணாமூர்த்தி (28), செங்கல்பட்டு மேட்டு தெரு குமரன் (30) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் போலீஸ்காரர் மகனும் கள்ளக்காதலனுமான சதீசுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி லட்சுமி எங்கே? என்று தெரியவில்லை.

No comments:

Powered by Blogger.