கிரிஸ் நாட்டில் படகு மூழ்கி 7 அகதிகள் பலி
கிரிஸ் நாட்டில் உள்ள ஏகியன் கடலில் படகு மூழ்கியதில் 2 குழந்தைகள் உள்பட 7 புலம் பெயர்ந்தவர்கள் பலியானார்கள். மேலும் காணாமல் போன இருவரை தேடி வருகின்றனர்.
கிரிஸ் துறைமுகத்தின் அங்குள்ள லெஸ்போஸ் தீவில் 17 பேர் படகில் சென்றுள்ளனர். அப்போது திடீரென படகு கவிழ்ந்ததால் அனைவரும் நீருக்குள் மூழ்கி கடலில் தத்தளித்து வந்தனர். உடனடியாக அங்கு விரைந்த கடலோர பாதுகாப்பு படையினர், நீரில் மூழ்கியவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தனர்.
அவர்களின் முயற்சியால் 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒன்பது பேரில் 7 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் உருவாகியுள்ள உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஐரோப்பிய யூனியனுக்கு செல்லும் நுழைவாயிலாக கிரிஸ் துறைமுகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: