Header Ads

த்ரிஷா- நயன்தாரா தலைப்புக்கு எதிர்ப்பு வருமா?

த்ரிஷா, நயன்தாரா பெயரில் படம் உருவாகிறது. இதற்கு எதிர்ப்பு வருமா என்று கேட்டதற்கு ஹீரோ பதில் அளித்தார். நதியா, குஷ்பு என ஹீரோயின்கள் பெயரில் பாடல்கள் வந்திருக்கிறது. சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கும் படத்திற்காக த்ரிஷாவும் வேணாம், நயன்தாராவும் வேணாம் ஹன்சிகாவே போதும் என்று சிம்பு பாடல் எழுதி பாடினார். இந்நிலையில் த்ரிஷா, நயன்தாரா தலைப்பில் புதிய படம் உருவாகிறது. மேஜர் ரவியிடம் உதவி இயக்குனராக இருந்த ஆதிக் இயக்குகிறார். 

ஏற்கனவே பென்சில் படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் இதில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.நடிகைகள் பெயரில் தலைப்பு வைத்தால் எதிர்ப்பு வருமே? என்று பிரகாஷிடம் கேட்டபோது,இப்படத்திற்கு த்ரிஷா அல்லது நயன்தாரா என இருவரில் ஒரு பெயரை வைக்க எண்ணி உள்ளோம். இவர்களில் ஒருவரிடம் அனுமதி கேட்டுவிட்டேன். இன்னொருவரிடம் அனுமதி கேட்க உள்ளேன். இருவரில் ஒருவரை கவுரவ வேடத்தில் நடிக்கவும் கேட்க உள்ளேன். இப்படத்துக்கு இசை அமைக்கும் பொறுப்பையும் நான் ஏற்கிறேன் என்றார். -

No comments:

Powered by Blogger.