உல்லாசத்துக்கு இணங்க மறுத்த பெண்ணை எரித்துக் கொன்றவன் கைது
உல்லாசத்துக்கு இணங்க மறுத்த அடுத்தவர் மனைவியை எரித்துக் கொன்ற காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அங்குள்ள இரும்பு பட்டறையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
அபித்கர் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு வந்த இரும்பு பட்டறை மேஸ்திரி, தனது ஆசைக்கு இணங்கும்படி, அந்த தொழிலாளியின் 30 வயது மதிக்கத்தக்க மனைவியை வற்புறுத்தியுள்ளான்.
இதற்கு அந்த பெண் சம்மதிக்காததால் ஆத்திரமடைந்த அந்த காமக் கொடூரன், வீட்டில் இருந்த மண் எண்ணையை அவரது உடலின் மீது ஊற்றி, தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டான்.
உடல் முழுவதும் தீயில் வெந்து உருக்குலைந்துப் போன நிலையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இரும்பு பட்டறை மேஸ்திரி லக்கன் யாதவ் என்பவனை கைது செய்த போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

No comments: