Header Ads

கணவரை பிரிந்த சரிதா ரீ என்ட்ரி

கணவர் முகேஷை பிரிந்த சரிதா மீண்டும் நடிக்க வந்தார். தப்பு தாளங்கள், தண்ணீர் தண்ணீர், நெற்றிக்கண், மவுன கீதங்கள் என 1980களில் சிவாஜி, ரஜினி, கே.பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் சரிதா. மலையாள நடிகர் முகேஷை காதலித்து மணந்தார். இந்நிலையில் இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.  சமீபத்தில் முகேஷ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். தமிழில் கடந்த 2003ம் ஆண்டு ஜூலி கணபதி என்ற படத்தில் சரிதா நடித்தார். அதன்பிறகு நடிப்பதை நிறுத்தி இருந்தார். 10 ஆண்டுகளுக்கு பின்னர் இனம் என்ற படம் மூலம் ரீ என்ட்ரி ஆகி இருக்கிறார். ஆங்கிலம் தமிழில் உருவாகி இருக்கும் இப்படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். 

விஷால்.சி. இசை அமைக்கிறார். சந்தோஷ் சிவன், முபைனா ரத்தோன்சே, சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பு. இலங்கை பிரச்னையை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டிருந்தாலும் இதில் அரசியல் கலப்பு எதுவுமில்லை. அனாதையாக நிற்கும் ஒரு சிறுமியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்றார் சந்தோஷ் சிவன். 

No comments:

Powered by Blogger.