Header Ads

ஹன்சிகாவை பாடாய்படுத்தும் இந்த காதல்

ரசிகர்கள் போன் போட்டு அன்புத்தொல்லை செய்வதால் வருத்தத்தில் உள்ளாராம் ஹன்சிகா.
சிம்பு, ஹன்சிகா காதல் சமீபத்தில் முறிந்தது. இதனை சிம்பு அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து ஹன்சிகாவுக்கு தினமும் ஏராளமான ரசிகர்கள் போன் செய்து காதல் முறிவுக்கான காரணம் கேட்டு நச்சரித்தனர்.

இது போல் சக நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் போனில் தொடர்பு கொண்டு இதுபற்றி பேசியுள்ளனர்.

இது ஹன்சிகாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால் கையில் மொபைல் போன் வைத்திருப்பதை தவிர்க்கிறார். மேலும் படபிடிப்புக்கும் போனை எடுத்துச் செல்வது இல்லையாம், கையில் போன் இல்லாமலேயே தினமும் சூட்டிங் போய் வருகிறார்.

No comments:

Powered by Blogger.