Header Ads

மீண்டும் ஆர்யா- அமலா பால்

மீண்டும் ஆர்யாவும், அமலா பாலும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.
பார்த்திபன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தின் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க ஏற்கெனவே விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

தற்போது அவரைத் தொடர்ந்து மேலும் பல பிரபலங்கள் இப்படத்தில் இணையவிருக்கிறார்கள்.

‘வேட்டை’ படத்தில் இணைந்து நடித்த ஆர்யாவும் அமலா பாலும் மீண்டும் இந்தப் படத்தில் இணைகிறார்களாம்.

அதேபோல் நஸ்ரியா நசீம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

இப்படம் சினிமா சம்பந்தப்பட்ட கதை என்பதால் அனேகமாக இவர்கள் அனைவரும் அந்தந்த நடிகர், நடிகையாக படத்தில் வருவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Powered by Blogger.