கடலில் மிதப்பது விமான பாகமா?: பலத்த மழையால் தேடும் பணி பாதிப்பு
239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்புரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்க்கு சென்ற மலேசிய விமானம் கடந்த 8–ந் தேதி திடீரென மாயமானது தெற்கு சீன கடலுக்கு மேலே பறந்த போது விமான கட்டுப்பாட்டு அறையுடன் ஆன தொடர்பை இழந்தது. அதையடுத்து 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது வியட்நாம் அருகே புகுவாக் தீவு அருகே கடலில் விழுந்து மூழ்கி விட்டதாக தகவல் வெளியாகின.
எனவே அந்த விமானத்தை தேடும் பணியில் 26 நாடுகள் ஈடுபட்டுள்ளன. விமானம் மாயமாகி 2 வாரங்களாகயும் உடைந்த பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
எனவே, விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் சிப்பந்திகளின் குடும்பத்தினர் தீராத கவலை மற்றும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே மாயமான விமானத்தின் பாகங்கள் என கருதப்படும் 2 பொருட்கள் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் கண்டுபிடிக்க பட்டதாக தகவல் வெளியானது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 2 ஆயிரத்து 500 கி.மீட்டர் தொலைவில் அவை கடலில் மதிப்பதை செயற்கை கோள் படம் காட்டிக் கொடுத்துள்ளது.
24 மீட்டர் (78 அடி) நீளம் கொண்ட அந்தப் பொருள் பல்லாயிரம் மீட்டர் ஆழத்திலிருந்து தண்ணீரில் மேலே அடித்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் மாயமான விமானத்தின் சிதைவுகளை கண்டறிய ஆஸ்திரேலியாவின் 5 கப்பல்கள் விரைந்துள்ளன.
மேலும், ஆஸ்திரேலியாவின் செயற்கை கோள்படத்தில் தெரிவது விமானத்தின் உடைந்த பாகமா? என்பதை உறுதி செய்ய ஆய்வும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இத்தகவலை ஆஸ்திரோலியா பிரதமர் (பொறுப்பு) வாரன் டிரஸ் தெரிவித்துள்ளார்.

No comments: