உச்ச நடிகரின் திடீர் முடிவு!
உச்ச நடிகர் தற்போது நடித்துள்ள சரித்திர கார்ட்டூன் படத்தின் ஆடியோ நாளை வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், உச்ச நடிகர் இந்த படத்தோடு தனது நடிப்புக்கு முழுக்கு போட முடிவெடுத்துள்ளாராம். இதை தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் கூறி வருகிறாராம்.
இதை கேட்டு அதிர்ந்து போன அவர்கள், இந்த முடிவை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனராம். ஆனால், உச்ச நடிகரோ தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவில் உறுதியாக இருக்க முடிவு செய்துள்ளாராம். இருந்தாலும், படம் வெளிவந்து உச்சத்தை தொட்டால் உச்சநடிகரின் முடிவில் மாற்றம் ஏற்படும் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர்.

No comments: