Header Ads

ரஜினிக்கு ஜோடியாகிறாரா அனுஷ்கா?

கோச்சடையான்' படத்துக்குப் பிறகு ரஜினி யார் படத்தில் நடிக்கிறார்? இதுதான் கோடம்பாக்கத்தின் கோடி ரூபாய் கேள்வியாக இருக்கிறது.

ஷங்கர், கே.வி.ஆனந்த், கே.எஸ்.ரவிகுமார் ஆகிய மூவரில் ஒருவர்தான் ரஜினியை இயக்குவார் என்று சொல்லப்பட்டு வந்தது.



இந்நிலையில், ரஜினி படத்தைத் தயாரிக்க ஏ.விஎம், ஈராஸ் உள்ளிட்ட பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில் கன்னடத் தயாரிப்பாளர் ராக் லைன் வெங்கடேஷூக்கு ரஜினியின் கால்ஷீட் கிடைத்திருக்கிறது.

கே.எஸ். ரவிகுமார்தான் படத்தின் இயக்குநர் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். அநேகமாக இது படையப்பா பார்ட் 2 ஆக இருக்குமாம். ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. 

No comments:

Powered by Blogger.