Header Ads

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி - கமல்! விஸ்வரூபம் - 2 மற்றும் ஜெய்ஹிந்த் - 2 என, பல படங்களின் இரண்டாம் பாகம் வளர்ந்து கொண்டிருப்பதைத் தொடர்ந்து தற்போது, ஐ படத்தை இயக்கி வரும் ஷங்கருக்கும், ஏற்கனவே...

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி - கமல்!
விஸ்வரூபம் - 2 மற்றும் ஜெய்ஹிந்த் - 2 என, பல படங்களின் இரண்டாம் பாகம் வளர்ந்து கொண்டிருப்பதைத் தொடர்ந்து தற்போது, ஐ படத்தை இயக்கி வரும் ஷங்கருக்கும், ஏற்கனவே தான் இயக்கி, கமல் நடித்த, இந்தியன் மற்றும் ரஜினி நடித்த, எந்திரன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர், ரஜினி, கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இருவருமே சம்மதம் தெரிவித்து உள்ளனர். அதனால், அடுத்தடுத்து, இந்தியன் மற்றும் எந்திரன் படங்களை முன்பு இயக்கியதை விட, பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்க, தயாராகிக் கொண்டிருக்கிறார் ஷங்கர்.
—சினிமா பொன்னையா

மீண்டும் தமிழில் தீபிகா, சன்னி லியோன்!
அஜித்தை இயக்கும் படத்தில், சமந்தாவை, 'புக்' செய்திருந்தார் கவுதம் மேனன். ஆனால், 'இந்த ஆண்டு முழுக்க, தன் கால்ஷீட் டைரி புல்...' என்று சொல்லி, கை விரித்து விட்டார் சமந்தா. அதனால், அனுஷ்காவிடம் பேசினார். இதற்கிடையே, அப்படத்திற்கு கதை, வசனகர்த்தாவாக நியமிக்கப்பட்ட, ஸ்ரீதர் ராகவன் குறுக்கிட்டு, 'தீபிகா படுகோனேயை கமிட் செய்து, இந்தியிலும் படத்தை ரிலீஸ் செய்யுங்கள்...' என்று, ஐடியா கொடுக்க, இப்போது, தீபிகா பக்கம் திரும்பியுள்ளார் கவுதம் மேனன். அதோடு, ஒரு பாடலில் நடனமாட, சன்னி லியோனியிடம் பேசுகிறார். ஆக, கோச்சடையானில் நடித்துள்ள தீபிகா, வடகறியில் நடனமாடியுள்ள சன்னி லியோன் ஆகிய இருவரும், மீண்டும் தமிழுக்கு வருகின்றனர்.
— சி.பொ.,

சமந்தாவுக்கு அஞ்சாத அமலாபால்!
ஆந்திர சினிமாவில் இருந்து கரையேறி, கோடம்பாக்கத்திற்குள், சமந்தா கால் பதிக்கிறார் என்றதுமே, ஹன்சிகா, தமன்னா போன்ற நடிகைகளுக்கு பீதி ஏற்பட்டது. தஞ்சம் தேடி, அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டனர். ஆனால், அமலாபால் இந்த விஷயத்தில், தில்லாக இருப்பதுடன், 'நான் நடித்துள்ள, வேலையில்லா பட்டதாரி, திரைக்கு வந்தால், அதன்பின் என் மார்க்கெட்டை, எந்த நடிகையாலும் கவிழ்க்க முடியாது. அதோடு, என்னுடன் ஜோடி சேர, மேல் தட்டு ஹீரோக்களே ஆசைப்படுவர்...' என்று மார்தட்டுகிறார். இருப்பினும், சமந்தாவின் பிரவேசத்தால், தன் மார்க்கெட் சறுக்கி விடக் கூடாது என்பதற்காக, சில இயக்குனர்களையும் கெட்டியாக பிடித்துள்ளார். தலையெழுத்து இருக்க, தந்திரத்தால் ஆவதென்ன!
— எலீசா

ரசிகர் மன்றம் துவங்குகிறார் இளையராஜா! 
சினிமாவில் பிசியாக இசையமைத்து வந்த காலத்தில், இளையராஜாவின் அபிமானிகள், ஆங்காங்கே, அவருக்கு ரசிகர் மன்றம் வைத்த போது, அப்போது, அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் இருந்து வந்த இளையராஜா, இப்போது, தன் மூத்த மகன், கார்த்திக் ராஜா தலைமையில், விரைவில் ஒரு ரசிகர் மன்றம் திறக்கிறார். உலகமெங்கிலுமுள்ள தன் ரசிகர்களை ஒன்று திரட்டி, அந்த மன்றத்தில் இணைக்கும் இளை யராஜா, அவர்களை சமூக நலனுக்காக, பயன்படுத்தப் போவதாக கூறுகிறார்.
—சினிமா பொன்னையா

செகண்ட் ஹீரோயினியான சுரபி!
இவன் வேற மாதிரி படத்தில், விக்ரம் பிரபுவுக்கு, ஜோடியாக நடித்தவர் டில்லி மாடல் அழகி சுரபி. ஆனால், அதன்பின், அவருக்கு தமிழில் படமில்லை. இருப்பினும், கோடம்பாக்கத்தில் முகாமிட்டு, பட வேட்டை நடத்தி வந்த சுரபிக்கு, இப்போது தனுஷ் - அமலாபால் நடித்து வரும், வேலையில்லா பட்டதாரி படத்தில், செகண்ட் ஹீரோயினி வேடம் கிடைத்துள்ளது. முதலில் தயங்கிய சுரபி, விட்டால் இந்த வாய்ப்பையும் வேறு நடிகைகள் கொத்திச் சென்று விடுவர் என்று, அப்படத்தில் நடித்துக் கொண்டே, முதன்மை நாயகி வேடத்தில், நடிக்க கல்லெறிந்து வருகிறார்.கண்டதைச் கொண்டு கரை ஏற வேண்டும்!
— எலீசா

கறுப்பு பூனை!
தெலுங்கு படங்களில் நடித்த போது, காதல் கிசுகிசுவில் சிக்கிய பாய்ஸ் நடிகர், இப்போதும், தன் காதல் நடிகையுடன், அவ்வப்போது ரகசிய மீட்டிங் போடுகிறார். ஆனால், தமிழ்நாட்டில் யாரும் அதை பெரிசுபடுத்தாததால், நடிகரை சந்திப்பதற்காக, படப்பிடிப்பு இல்லாத நாட்களில், சென்னைக்கு வரும் மேற்படி நடிகை, அவர் நடித்து வரும் படப்பிடிப்பு தளங்களுக்கே, விசிட் அடித்து, கேரவனுக்குள் மணிக்கணக்கில், கேம் ஆடுகிறார்.

அடுத்த சூப்பர் ஸ்டார் என்று, 'பில்டப்' கொடுத்து வரும், மெரினா நடிகர் மீது, பல கோலிவுட் நடிகர்கள், அதிருப்தியில் உள்ளனர். 'அந்த இடத்தை பிடிக்கிறதுக்காகத் தான், இருபது வருஷமா, போராடிக்கிட்டு இருக்கோம். எங்களாலே முடியல; இதுல, நேத்து பெஞ்ச மழையில, இன்னிக்கு முளைச்ச காளானுக்கெல்லாம், சூப்பர் ஸ்டார் ஆசையா...' என்று, தல, தளபதி நடிகர்களின் வட்டாரம், மேற்படி நடிகரை, வசைபாடிக் கொண்டிருக்கின்றனர்.

No comments:

Powered by Blogger.