Header Ads

239 பேருடன் விமானம் மாயம் பைலட் கடைசி வாசகம் திருத்தத்தில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை

கோலாலம்பூர்: மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 239 பயணிகளுடன் கடந்த மாதம் 8ம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. தென்சீன கடலின் மேலே வியட்நாம் வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது விமானம் திடீரென மாயமானது. தெற்கு இந்திய பெருங்கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என்று கருதி 10க்கும் மேற்பட்ட நாடுகள் தீவிரமாக தேடி வருகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு மேற்கே சுமார் 1800 கிமீ தொலைவில் கடலில் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

நியூசிலாந்தின் போர் விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது, கடலில் மர்ம பொருள் மிதப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. அது மலேசிய விமானத்தின் பாகம் தானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், பைலட்டுகள் கடைசியாக பேசிய வாசகத்தை நேற்று மலேசிய அரசு திருத்தி வெளியிட்டிருந்தது.  விபத்து குறித்த முழுமையான விபரங்களை அளிக்க வேண்டும் என்று சீன பயணிகளின் உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மலேசிய அதிகாரிகள் கூறும் போது, பைலட்டுகள் இறுதியாக பேசியதில் சந்தேகப்படும்படியான சங்கேத குறியீடுகள் எதுவும் இல்லை. 

இந்த விபத்தை தொடர்ந்து மலேசிய விமானங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. விமானத்தின் காக்பிட் அறையில் விமானியோ, துணை விமானியோ தற்போது தனியாக இருக்க அனுமதிக்கப்படுவது இல்லை. இவர்களில் யாரேனும் ஒருவர் கழிப்பறைக்குச் சென்றால் ஊழியர் குழுவின் உறுப்பினர் ஒருவர் அந்த அறைக்குள் இருக்க வேண்டும். அதேபோல் காக்பிட் அறைக்குள் உணவு கொண்டு வரப்படும் போது பயணிகள் யாரும் உள்ளே நுழைந்துவிடாமல் இருக்க ஊழியர் குழுவின் உதவியாளர் ஒருவர் விமானிகளின் அறைக்கு வெளியே நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தற்போது குடிநீர் பாட்டில் எடுத்து செல்வதற்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ளது‘ என்றனர்.

No comments:

Powered by Blogger.