குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நண்பனின் மனைவியை கற்பழித்த 2 பேர் கைது
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நண்பனின் மனைவியை கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயக்க மருந்து
தானே மும்ரா பகுதியை சேர்ந்தவர் பிரவின் மிஸ்ரா(வயது29). இவரது நண்பர் துர்வா வர்மா(21). இருவரும் டிரைவராக வேலை பார்த்து வருகின்றனர். இருவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் தங்கள் நண்பர் ஒருவரின் 21 வயது மனைவி மீது மோகம் உண்டானது. இதனையடுத்து அந்த பெண்ணை கற்பழிக்க இருவரும் திட்டமிட்டனர்.
சம்பவத்தன்று தங்கள் நண்பர் வீட்டில் இல்லாத சமயத்தில் பிரவின் மிஸ்ராவும், துர்வா வர்மாவும் அங்கு சென்று நண்பரின் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, கையில் இருந்த குளிர்பான பாட்டிலில் அந்த பெண்ணுக்கு தெரியாமல் இருவரும் மயக்க மருந்தை கலந்தனர்.
2 பேர் கைது
பின்னர் குளிர்பானத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து குடிக்கும்படி கூறினார்கள். அதை குடித்ததும் அந்த பெண் மயங்கி விழுந்தார். பின்னர் 2 பேரும் அந்த பெண்ணை கற்பழித்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு மயக்கம் தெளிந்தது. தன்னுடைய அலங்கோல நிலையையும், அருகில் கணவரின் நண்பர்கள் இருவரும் ஆபாசமாக நிற்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அலறித்துடித்த அவரை, இருவரும் சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
வேலைக்கு சென்ற கணவர் வீட்டிற்கு வந்ததும் நடந்த சம்பவத்தை கூறி, அந்த பெண் கதறி அழுதார். பின்னர் மும்ரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவின் மிஸ்ரா, துர்வா வர்மா ஆகிய இருவரையும் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments: