மும்பை போலீஸ் அதிகாரியால் கற்பழிக்கபட்டு 8 வருடங்களில் 23 முறை கருக்கலைப்பு செய்த பெண்
கமிஷன்ரிடம் கடந்த வாரம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
அந்த கொடூரமானவனின் பெயர் ரவீந்த்திர ஜெய்சிங் மாதேஷ் சிங் இந்த போலீஸ்காரர் தகிசர் பகுதியில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் வைத்து கடந்த 2002 ஆம் ஆண்டு துப்பாக்கி முனையில் என்னை மிரட்டி கற்பழித்தான். அவன் தினமும் தன்னை சந்திக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் உனது குடுமபத்தை இல்லாமல் ஆக்கிவிடுவதாகவும் மிரட்டினான். இதனால் மிகவும் பயந்து போனேன்.என அந்த புகார் மனுவில் கூறி உள்ளார்.
மாதேஷ் சிங் மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவார்.இவர் 42 வயது பெண் ஒருவர் இதே பகுதியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி தன்னை கற்பழித்ததாக கடந்த டிசம்பர் 27 ந்தேதி புகார் கூறி உள்ளார். இது தொடர்பாக அப்போத்தைய போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங் இலாகா பூர்வமானவிசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். ஆனால் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்பது கொடுமை
தற்போது 31 வயது பெண் தேஜாவு தற்போதைய கமிஷனர் ராகேஷ் மர்யாவிடம் புகார் அளித்து உள்ளார்.மாதேஷ் சிங் 2005 ல் மீண்டும் இந்த பெண்ணை கற்பழித்து உள்ளார். மேலும் அவர் கமிஷனரிடம் தான் 8 ம் முறை அறுவை சிகிச்சை மூலம் கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும், 15 முறை மாத்திரை மருந்து மூலம் கருகலைப்பு செய்ததாகவும் புகார் கூறி உள்ளார்.
மேலும் அந்த புகாரில் அவர் கூறி இருப்பதாவது 2005 க்கு பிறகு தன்னை போதை பொருள் தடுப்பு பிரிவில் போலீஸ் இன்பார்மராக சேர்த்து உள்ளார். அப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை உறவு கொண்டு உள்ளார். பின்னர்தான் அவர் ஏமாற்றியது தெரிந்தது.
ஒரு கட்டத்தில் அவர் எனது வீட்டிற்கு வர ஆரம்பித்தார். ஒவ்வொரு முறையும் மிரட்டி என்னை பணியவைத்தார்.ஒரு நாள் எதிர்க்க முயன்ற போது அவர் துப்பாக்கியை எடுத்து சுட்டார் அது வானத்தை நோக்கி சென்று விட்டது.துப்பாக்கிச் சத்தை கேட்டவர்கள் அவருக்கு எதிராக புகார் கூறினார்கள் அவர் தவறுதலாக துப்பாக்கி வெடித்து விட்டதாக கூறி தப்பித்து கொண்டார்.
2011 ஆம் ஆண்டு அவர் என்னை திருமணம் செய்ய சம்மதித்தார். நான் அவரது வீட்டுக்கு அழைத்து செல்லும் படி கூறினேன். ஆனால் அதற்கு அவர் மறுத்தார்.அப்போது தான் அவர் திருமணமானவர் எனபது தெரிந்தது.இதை நான் உறுதி செய்து கொண்டேன்.அவர் என்னை அடித்து உதைத்து கற்பழித்தார்.என கூறி உள்ளார்.
நானும் பல போலீஸ் ந்லையங்களுக்கு அலைந்து விட்டேன் யாரும் வழக்குப்பதிவு செய்ய முன்வரவில்லை. என புகாரில் கூறி உள்ளார்.இதை தொடர்ந்து கமிஷனர் உத்தரவின் பேரில் நேற்று மும்பை குற்றப்பிரிவு பெண் போலீசார் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
போலீஸ் அதிகாரி குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் தனி குழுவை நியமித்து உள்ளார்.

No comments: