Header Ads

நவநீதம்பிள்ளையை மட்டுமல்ல அவரது நாயைக் கூட அனுமதிக்க மாட்டோம்: இலங்கை அமைச்சர் திமிர் பேச்சு

கொழும்பு: ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை மட்டுமல்ல அவரது  நாயைக் கூட இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா திமிராக கூறியுள்ளார். 

இலங்கை பதுளையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் எங்களுக்கு என்று தனி மகத்துவம் உள்ளது என்றும் நாட்டின் உள் விவகாரங்களில் அயல்நாட்டினர் தலையீடு செய்வதை நாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். 

இதன் காரணமாகவே ஜனாதிபதியும், அரசாங்கமும் சர்வதேச சதிகளுக்கு எதிராக அந்த தீர்மானத்துக்கு எதிராக ஜெனிவாவில் போராடினோம் என்றும் நவநீதம்பிள்ளை அம்மையார் அல்ல அவரது நாய்கூட இலங்கைக்கு வந்து விசாரணை நடத்துவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்பதை மிகத் தெளிவாக கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.