அரசியலுக்கு வரவிடாமல் ரஜினியை தடுத்த சக்தி எது? ஹேமமாலினி பரபரப்பு பேட்டி
மும்பை: ‘அரசியலுக்கு வர ஆர்வமாக இருந்த ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்த சக்தி எது?’ என்று பரபரப்பாக கேள்வி எழுப்பி உள்ளார் நடிகை ஹேமமாலினி. பாலிவுட் மாஜி கனவு கன்னி ஹேமமாலினி. தற்போது, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ சார்பில் உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சென்னை வந்த பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்று சந்தித்தார். இது தொடர்பாக பல்வேறு செய்திகள் உலா வந்தன. இது பற்றி, நடிகை ஹேமமாலினி யும் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:
ரஜினியிடம் பலமுறை நான் அரசியல் பேசி இருக்கிறேன். அரசியலுக்கு அவர் வருவது பற்றி அவரிடம் நான் கேட்டபோது அரசியலுக்கு வரவேண்டும் என்றே அவர் எப்போதும் விரும்பினார். ஆனால், அவரை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்த சக்தி எது என்பது எனக்கு தெரியவில்லை. நான் அரசியலில் ஈடுபட்டிருப்பது பற்றி என்னிடம் பேசும்போது, ‘அரசியல் பணிகளை உங்களால் எப்படி மேற்கொள்ள முடிகிறது’ என்று ஆச்சரியத்துடன் கேட்பார். அதற்கு நானும் பதில் சொல்லி இருக்கிறேன். ரஜினி நினைத்தால் அவரால் எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரமுடியும். இவ்வாறு ஹேமமாலினி கூறினார். ஹேமமாலினி தமிழ்நாட்டை சேர்ந்த

No comments: