Header Ads

ஹன்சிகாவுக்கு கிடுக்கிப்பிடி போடும் சிம்பு!

வாலு படத்திற்காக தான் கொடுத்த கால்சீட்டை வீணடித்து விட்டனர் என்று கூறி வரும் ஹன்சிகாவை, எப்படியாவது அவரிடம் கால்சீட் வாங்கி படத்தை முடித்து விட வேண்டும் என்று சிம்பு மற்றும் அப்பட தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியும் முயற்சித்து வருகின்றனர். ஆனால், அதன்பிறகு மீகாமன், ரோமியோ ஜூலியட் போன்ற படங்களுக்கு கால்சீட் கொடுத்த ஹன்சிகா அவர்களை சட்டை பண்ணவேயில்லை.

இதனால் இப்படியே விட்டால் படத்தின் கதி அதோகதியாகி விடும் என்று இப்போது அவருக்கு இன்னும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கத்தியைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் ஒரு ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்க, இன்னொரு ஹீரோயினுக்காக இப்போது ஹன்சிகாவிடம் பேசியுள்ளனர்.

ஏற்கனவே வேலாயுதம் படத்தில் விஜய்யுடன நடித்துள்ள ஹன்சிகா, மீண்டும் பெரிய வாய்ப்பு கிடைக்கிறது என்றதும், தற்போது தான் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்தபோதும், எப்படியாவது கால்சீட் தந்து விடுகிறேன் என்று விஜய் படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளாராம். ஆனால், இந்த சேதி சிம்புதரப்புக்கு கிடைக்க, செம காண்டாகி விட்டனர்.

ஒரு வருசமா நடிக்கிற படம் கடைசி கட்ட படப்பிடிப்பில் நின்று கொண்டிருக்கிறது. இந்தநேரத்தில் நம்மை டீலில் விட்டு விட்டு இந்த வருடம் கடைசியில் தொடங்கும் விஜய் படத்துக்கு கால்சீட் தருவதாக சொல்லியிருக்கிறாரே என்று மீண்டும் ஹன்சிகாவை துரத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தமுறை அவர் செவிசாய்க்காவிட்டால், தயாரிப்பாளர் சங்கத்தில், ஹன்சிகா மீது புகார் அளித்து கடுமையான கிடுக்கிப்புடி போடவும் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Powered by Blogger.