காதல் தகராறில் பெண் என்ஜினியர் குத்திக்கொலை; காதலன் தற்கொலை முயற்சி உயிர் ஊசல்
காதல் தகராறில் என்ஜினியர் பெண்ணை கொலை செய்து விட்டு தன்னை தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற காதலன்
சென்னை பெருங்குடியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனமொன்றில் என்ஜினியராக பணிபுரிந்து வருபவர் மன்னார்குடியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரது மகள் வைசியா. வைசியா பணி புரியும் நிறுவனத்தில் உடன் பணிபுரிந்து வந்தவர் வெங்கடாஜலம் ’
என்ஜினீயர் வைசியாவை, வெங்கடாஜலபதி, காதல் தகராறில் குத்திக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்று உள்ளார். ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததால் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். அப்போது, வைசியா, வெங்கடாஜலபதியிடம் பல உதவிகளை கேட்டுள்ளார். இதனை செய்து கொடுத்த வெங்கடாஜலபதி, வைசியாவை காதலிக்க தொடங்கியுள்ளார். இதன் பின்னர் வைசியா வேறு யாரிடமாவது பேசினாலே அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக பலமுறை வைசியாவிடம் வெங்கடா ஜலபதி கூறியதாகவும் தெரிகிறது. இந்த விவகாரம் 2 பேருக்கும் இடையே விஸ்வ ரூபம் எடுத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று வெங்கடாஜலபதி, வைசியாவை நைசாக பேசி வெளியில் அழைத்துச் சென்றுள்ளார். பெருங்குடியில் வைத்து பேசிக் கொண்டிருந்த போதுதான், திடீரென வைசியாவை சரமாரியாக குத்திக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பெண் என்ஜினீயர் வைசியாவின் உடலை கைப்பற்றி ராயப்ப்ட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடாஜலபதியை மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இதே நிறுவனத்தில் பணியாற்றிய உமா மகேஸ்வரி என்ற பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

No comments: