Header Ads

மனைவியைப் பிரிந்தாரா சந்தானம்? கோடம்பாக்கத்தில் பரபரப்பு!

சிரிப்பு நடிகர் சந்தானம் இப்போதுதான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாகவே இனி காமெடியனாக நடிப்பதில்லை, இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துவிட்டார். அதுமட்டுமல்ல, தன் படக்கம்பெனி மூலம் தொடர்ந்து படங்களை தயாரிப்பது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார். ஆக..காமெடியன் என்ற ஸ்டேஜிலிருந்து ஹீரோ, தயாரிப்பாளர் என்ற ஸ்டேஜுக்கு உயர்ந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில் சந்தானம் பற்றி படத்துறையில் பரபரப்பான தகவல் ஒன்று அடிபடுகிறது. மனைவியைப் பிரிந்து சந்தானம் தனியாக வசிக்கிறார் என்பதே அந்த தகவல். சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பே சந்தானம் திருமணமானவர். இரண்டு குழந்தைகளும் உண்டு. சென்னையின் புறநகரான பொழிச்சலூரில் குடும்பத்துடன் வசித்து வந்த சந்தானம், மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த சில வாரங்களாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்திலேயே தங்கி வருகிறாராம். அதுமட்டுமல்ல, அதே பகுதியில் ஒரு ப்ளாட்டை வாங்கியிருக்கும் சந்தானம் விரைவில் அந்த ப்ளாட்டில் தனியாக குடியேற இருக்கிறாராம்.

நல்லா இருந்த மனுஷன்..! யார் கண் பட்டுச்சோ தெரியலையே...!

No comments:

Powered by Blogger.